செய்திகள்

கரோனா பாதிப்பு: இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை

6th May 2021 05:45 PM

ADVERTISEMENT

 

கரோனாவால் தாயை இழந்த அடுத்த இரு வாரத்தில் சகோதரியையும் இழந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனையான வேதா கிருஷ்ணமூர்த்தி.

இந்திய அணிக்காக 48 ஒருநாள், 76 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் வேதா கிருஷ்ணமூர்த்தி. கடைசியாகக் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் விளையாடினார். 

வேதாவின் தாய் தேவி (67), இரு வாரங்களுக்கு முன்பு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் வேதாவின் சகோதரி வத்சலாவும் (42) கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் வேதாவின் தந்தை, சகோதரர், 2-வது சகோதரி எனப் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்துவிட்டு பெங்களூருக்குத் திரும்பினார் வேதா. கரோனாவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் பரிசோதனை செய்துகொண்டார். அதில் கரோனா பாதிப்பு இல்லை எனத் தெரிய வந்தது. 

ADVERTISEMENT

இரு வார இடைவெளியில் தாய், சகோதரியை இழந்த வேதாவுக்குப் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாக ஆறுதல்களைத் தெரிவித்து வருகிறார்கள். 

Tags : Veda Krishnamurthy COVID 19 sister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT