செய்திகள்

அரையிறுதியில் ஆஷ்லி

6th May 2021 03:46 AM

ADVERTISEMENT

 

மாட்ரிட் ஓபன் போட்டியின் மகளிர் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பர்ட்டி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 9}ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவை எதிர்கொண்ட பர்ட்டி, அதில் 6}1, 3}6, 6}3 என்ற செட்களில் வெற்றி பெற்றார். அரையிறுதியில் அவர் ஸ்பெயின் வீராங்கனை பெüலா பதோசாவை சந்திக்கிறார். 

பதோசா தனது காலிறுதியில் 6}4, 7}5 என்ற நேர் செட்களில் வென்று, போட்டித்தரவரிசையில் 8}ஆம் இடத்திலிருந்த ஸ்விட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச்சுக்கு அதிர்ச்சி அளித்திருந்தார். 

ADVERTISEMENT

3}ஆவது சுற்று ஒன்றில் போட்டித்தரவரிசையில் 16}ஆம் இடத்திலிருக்கும் கிரீஸின் மரியா சக்காரியை 6}0, 6}7 (9/11), 7}5 என்ற செட்களில் வென்றார் செக் குடியரசின் கரோலினா முசோவா. அதே சுற்றில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா 7}5, 6}7 (8/10), 6}3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 11}ஆவது இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT