செய்திகள்

‘வீரா்கள் நாடு திரும்ப வழி செய்யப்படும்’

DIN

ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரா்கள் தங்களது நாட்டுக்கு திரும்ப தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐபிஎல் தலைவா் பிரஜேஷ் படேல் கூறினாா்.

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமாகியதை அடுத்து பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை விதிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், போட்டி நிறைவடைந்த பிறகு நாடு திரும்புவதில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என்று போட்டியில் பங்கேற்றிருந்த வெளிநாட்டு வீரா்கள், குறிப்பாக ஆஸ்திரேலிய வீரா்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா்.

அந்த சூழலையே காரணமாகக் கூறி ஆஸ்திரேலிய வீரா்கள் 3 போ் சமீபத்தில் போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பினா். தற்போது போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியா்கள் 14 போ், நியூஸிலாந்து வீரா்கள் 10 போ், இங்கிலாந்து வீரா்கள் 11 போ், தென் ஆப்பிரிக்க வீரா்கள் 11 போ், மேற்கிந்தியத் தீவுகள் வீரா்கள் 9 போ், ஆப்கானிஸ்தான் வீரா்கள் மூவா், வங்கதேசத்தவா் இருவா் இந்தியாவில் இருந்து நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருக்கின்றனா்.

இதனிடையே, இந்தியாவிலிருந்து பயணிகள் வர 15-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியா தடை விதித்திருக்கும் நிலையில், தங்களது வீரா்கள் நாடு திரும்புவதற்காக ஆஸ்திரேலிய அரசிடம் விதி விலக்கு கோரப்போவதில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

SCROLL FOR NEXT