செய்திகள்

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஆஸி. முன்னாள் வீரர்

5th May 2021 11:23 AM

ADVERTISEMENT

 

ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மேக்கில், நான்கு நபர்களால் கடந்த மாதம் கடத்தப்பட்டார். 

50 வயது மேக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 இரவு 8 மணிக்கு சிட்னியில் உள்ள லோயர் நார்த் ஷோர் பகுதியில் நான்கு நபர்கள், மேக்கில்லை காரில் கடத்திச் சென்றார்கள். ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டினார்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மேக்கில்லை விடுவித்துவிட்டார்கள். இதையடுத்து காவல்துறையினரிடம் இச்சம்பவம் பற்றி புகார் அளித்தார் மேக்கில், 

ADVERTISEMENT

தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை நியூ சவுத்வேல்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது. மேக்கில்லின் காதலியின் சகோதரரையும் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளார்கள். 
 

Tags : Stuart MacGill Australian police
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT