செய்திகள்

ஒருநாள் அணி தரவரிசை: முதல் இடத்தில் நியூசிலாந்து அணி

3rd May 2021 05:09 PM

ADVERTISEMENT

 

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சமீபத்தில் வங்கதேச அணியை 3-0 என ஒருநாள் தொடரில் முழுமையாக வென்றது நியூசிலாந்து அணி. இதையடுத்து ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. ஆஸ்திரேலியா 2-ம் இடத்தையும் இந்தியா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன. 

கடந்த ஒரு வருடத்தில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்திலும் தோல்வியடைந்ததால் தரவரிசையில் 4-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது.

ADVERTISEMENT

எனினும் டி20 தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்தைத் தக்கவைத்துகொண்டுள்ளது. இந்தியா 2-ம் இடத்தில் உள்ளது. 

Tags : ICC New Zealand England ODI rankings
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT