செய்திகள்

மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடிப்பது கடினம்: கவாஸ்கர்

31st Mar 2021 05:42 PM

ADVERTISEMENT

 

இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடிப்பது கடினம் என முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார். 

ஐபிஎல் 2020 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் போட்டி ஆரம்பித்த முதல் ஐந்து வருடங்களில் ஒரு கோப்பையையும் மும்பை அணி வெல்லவில்லை. அதாவது 2008 முதல் 2012 வரை. ஆனால் 2013-ல் மும்பை அணியின் கேப்டன் ஆனார் ரோஹித் சர்மா. அதில் ஆரம்பித்து இதுவரை 2013, 2015, 2017, 2019, 2020 என ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றுவிட்டது. 

மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியதாவது:

ADVERTISEMENT

மும்பை இந்தியன்ஸ் அணியைத் தோற்கடிப்பது கடினம். அவர்களுடைய வீரர்கள் ஃபார்மில் இருப்பதை நாம் பார்க்கிறோம். இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் நன்கு விளையாடியுள்ளார்கள். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமல்லாமல் இந்திய அணிக்காகவும் பாண்டியா நன்கு விளையாடி வருகிறார். ஒருநாள் ஆட்டத்தில் அவர் 9 ஓவர்கள் வீசியுள்ளார். எனில் அத்தனை ஓவர்கள் வீசுவதற்கு அவர் தயாராக உள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. பாண்டியா மீண்டும் நன்கு விளையாடுவது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் நல்ல செய்தியாகும் என்றார். 

ஏப்ரல் 9 அன்று, ஐபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

Tags : Mumbai Indians Gavaskar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT