செய்திகள்

ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் விலகல்

31st Mar 2021 05:07 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார்.

2020 போட்டியில் மிட்செல் மார்ஷை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. காயம் காரணமாகக் கடந்த வருடம் ஓர் ஆட்டத்தில் மட்டுமே மிட்செல் மார்ஷ் விளையாடினார். 

சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்ஷ், பிக் பாஷ் லீக் போட்டியிலும் விளையாடினார். கடந்த 10 வருடங்களில் 21 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட காலம் இருப்பது சோர்வைத் தரும் என்பதால் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இங்கிலாந்து வீரர் ஒருவரைத் தேர்வு செய்ய சன்ரைசர்ஸ் அணி திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. 

29 வயது மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய அணிக்காக 32 டெஸ்டுகள், 60 ஒருநாள், 20 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

Tags : Mitchell Marsh IPL 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT