செய்திகள்

சன்ரைசர்ஸ் அணியில் ஜேசன் ராய்

31st Mar 2021 08:00 PM

ADVERTISEMENT


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷுக்குப் பதில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் மார்ஷ் கடந்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கினார். ஆனால், காயம் காரணமாக தொடரிலிருந்து அவர் வெளியேறினார். இந்த நிலையில், நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக மார்ஷ் இன்று (புதன்கிழமை) அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு ராய் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ராய் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : Jason Roy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT