செய்திகள்

ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள்: இலங்கை வீரர் திசாரா பெரேரா சாதனை (விடியோ)

29th Mar 2021 04:47 PM

ADVERTISEMENT

 

31 வயது திசாரா பெரேரா, 6 டெஸ்டுகள், 166 ஒருநாள், 84 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

அதிரடி ஆட்டத்துக்குப் புகழ் பெற்ற திசாரா பெரேரா, புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். எந்த வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார். 

எஸ்.எல்.சி. மேஜர் கிளப் போட்டியில் இலங்கை ராணுவ ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சார்பாக விளையாடிய பெரேரா, புளூம்ஃபீல்ட் கிரிக்கெட் அண்ட் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 13 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். 

ADVERTISEMENT

முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி அனுபவம் கொண்ட வீரரான தில்ஹன் கூரே வீசிய ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அசத்தினார் பெரேரா. இதனால் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த முதல் இலங்கை வீரர் என்கிற பெருமை பெரேராவுக்குக் கிடைத்துள்ளது. மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த 2-வது வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் விடியோவை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT