செய்திகள்

கடந்த 43 இன்னிங்ஸில் ஒரு சதமும் அடிக்காத குறை: விராட் கோலியின் ஆச்சர்ய பதில்!

27th Mar 2021 12:02 PM

ADVERTISEMENT

 

கடந்த 43 இன்னிங்ஸில் ஒரு சதமும் அடிக்காமல் இருப்பது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி பதில் அளித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டெஸ்ட், ஒருநாள், டி20 எனக் கடைசியாக விளையாடிய 43 இன்னிங்ஸிலும் ஒரு சதமும் அடிக்க முடியாமல் உள்ளார் விராட் கோலி. டெஸ்டில் 27 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 சதங்களும் எடுத்துள்ள கோலி, கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு சதம் கூட எடுக்க முடியாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக, 2019 நவம்பரில் வங்கதேசத்துக்கு எதிராக 136 ரன்கள் எடுத்தார் கோலி. அதற்குப் பிறகு விளையாடிய 43 இன்னிங்ஸிலும் அவர் ஒரு சதமும் எடுக்கவில்லை.

ADVERTISEMENT

இதுபற்றிய கேள்விக்கு விராட் கோலி பதில் அளித்ததாவது:

சதங்கள் அடிப்பதற்காக என் வாழ்வில் விளையாடியதேயில்லை. அதனால் தான் குறைவான காலங்களில் அதிக சதங்கள் அடித்திருக்கிறேன். அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதே முக்கியம். சதம் அடித்தும் உங்கள் அணி வெல்லாவிட்டால் அந்தச் சதத்தால் எந்தப் பயனும் இல்லை. உங்கள் கிரிக்கெட் வாழ்வின் முடிவில் சதங்களின் எண்ணிக்கையைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் எப்படி விளையாடினீர்கள் என்பதே முக்கியம். இரு பலமான அணிகள் மோதும்போது அன்றைய நாளில் எந்த அணி சிறப்பாக விளையாடியது என்பதே முக்கியம் என்றார்.

Tags : Virat Kohli century
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT