செய்திகள்

சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு

27th Mar 2021 10:28 AM

ADVERTISEMENT

 

பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்டுகள், 463 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்களும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்களும் எடுத்துள்ளார். 2013-ல் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் ட்விட்டரில் சச்சின் இன்று கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவருக்கும் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவர்கள் கூறிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். எனக்கு உதவும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என சச்சின் கூறியுள்ளார்.

ராய்ப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு உலக சீரிஸ் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய லெஜன்ட்ஸ் அணி, இறுதிச்சுற்றில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

Tags : COVID 19 Sachin Tendulkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT