செய்திகள்

3-வது ஒருநாள் ஆட்டத்தில் நடராஜன் விளையாடுவாரா?

27th Mar 2021 03:10 PM

ADVERTISEMENT

 

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் விளையாடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்கை 43.3 ஓவர்களில் அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

நேற்றைய ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. 5 பந்துவீச்சாளர்களில் பிரசித் கிருஷ்ணா மட்டுமே 6 ரன்களுக்குக் குறைவான எகானமி வைத்திருந்தார். ஷர்துல் தாக்குர் 7.3 ஓவர்களில் 54 ரன்களும் குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 84 ரன்களும் கிருனாள் பாண்டியா 6 ஓவர்களில் 72 ரன்களும் கொடுத்ததால் மோசமான தோல்வியை அடைந்துள்ளது இந்திய அணி. 

ADVERTISEMENT

இதன் காரணமாக நாளை நடைபெறவுள்ள 3-வது ஒருநாள் ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இடது கை பந்துவீச்சாளர், கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசும் திறமை போன்றவற்றால் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு, நடராஜனைச் சேர்க்க வாய்ப்புள்ளது.

எனினும் முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி வெற்றியை அளித்தார்கள். இதனால் அவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பை கோலி வழங்குவார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. 

நடராஜன் இதுவரை டெஸ்ட், ஒருநாளில் தலா 1 ஆட்டங்களிலும் டி20யில் 4 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 

Tags : Prasidh Krishna Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT