செய்திகள்

3-ம் நிலை வீரராக 10,000 ரன்கள்: விராட் கோலி சாதனை

26th Mar 2021 03:12 PM

ADVERTISEMENT

 

ஒருநாள் கிரிக்கெட்டில் 3-ம் நிலை வீரராக 10,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரை 3-1 என வென்றது இந்திய அணி. இதையடுத்து ஆமதாபாத்தில் நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-2 என இந்தியா வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புணேவில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

முதல் ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி, 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மீண்டும் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ள கேப்டன் மார்கனுக்குப் பதிலாக மலான் அணியில் இடம்பெற்றுள்ளார். லியம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகியுள்ளார். மார்க் வுட்டுக்குப் பதிலாக ரீஸ் டாப்லி தேர்வாகியுள்ளார். பட்லர் அணிக்குத் தலைமை தாங்குகிறார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

14-வது ஓவரில் இந்திய கேப்டன் விராட் கோலி, டாம் கரண் பந்தில் பவுண்டரி அடித்தார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3-ம் நிலை வீரராக 10,000 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோலி. ரிக்கி பாண்டிங்கும் கோலியும் மட்டுமே 3-ம் நிலையில் 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர்கள். 

3-ம் நிலை வீரராக அதிக ரன்கள்

ரிக்கி பாண்டிங் - 12662 ரன்கள், சராசரி - 42.48
விராட் கோலி - 10000* ரன்கள், சராசரி - 62.89

ஒரே நிலையில் தொடர்ந்து விளையாடி மூன்று வீரர்கள் மட்டுமே 10,000 ஒருநாள் ரன்கள் எடுத்துள்ளார்கள். சச்சின் 2-ம் நிலையிலும் பாண்டிங், கோலி ஆகியோர் 3-ம் நிலையிலும் 10,000 ரன்களை எடுத்துள்ளார்கள். இதில் மிக விரைவாக, 190 இன்னிங்ஸில் இந்த இலக்கை எட்டியுள்ளார் விராட் கோலி. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT