இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்: சமீப காலத்தில் எங்களது சிறந்த வெற்றி முதல் ஒருநாள் ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை மிக விரைவாக வீழ்த்திவிட்டோம். ஓர் அணியாக பழைய ஃபார்முடனான ஆட்டத்துக்கு திரும்பியதற்காக, கேப்டனாக பெருமை கொள்கிறேன்.
இந்த வெற்றி, சமீப காலத்தில் ஒருநாள் போட்டிகளில் கிடைத்த சிறந்த வெற்றியாகும். எப்போதுமே தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணும் வீரர்களுக்கு நாங்கள் ஊக்கமளிக்கிறோம். ஷிகர் தவனும், லோகேஷ் ராகுலும் தங்களது ஃபார்மை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி. மிகவும் இக்கட்டான கட்டத்தில் தவன் தனது இன்னிங்ûஸ விளையாடினார். தற்போதைய நிலையில் பிளேயிங் லெவனில் ஒவ்வொரு இடத்துக்குமே 2-3 வீரர்கள் தயாராக இருக்கின்றனர். அந்த வகையில் அணி தற்போது சரியான பாதையில் பயணிக்கிறது.
- விராட் கோலி (இந்திய கேப்டன்-