செய்திகள்

டி20 தரவரிசை: 5-வது இடத்துக்கு முன்னேறினார் கோலி

17th Mar 2021 04:23 PM

ADVERTISEMENT


ஐசிசியின் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2 மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் அரைசதம் அடித்து அசத்தி வரும் விராட் கோலி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் உள்ளார்.

முதல் மூன்று ஆட்டங்களில் மொத்தமாக 1 ரன் மட்டுமே எடுத்துள்ள கேஎல் ராகுல் தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஷ்ரேயஸ் ஐயர் 32 இடங்கள் முன்னேற்றம் கண்டு 31-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தைப் பிடித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் ஷர்துல் தாக்குர் 27-வது இடத்துக்கும், புவனேஷ்வர் குமார் 45-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இங்கிலாந்து வீரர்கள்:  

3-வது டி20 ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 83 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் மீண்டும் டாப் 20-க்குள் நுழைந்து 19-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜானி பேர்ஸ்டோவ் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 4 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் 34-வது இடத்துக்கும், மார்க் வுட் 39-வது இடத்துக்கும், சாம் கரன் 74-வது இடத்துக்கும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

Tags : Kohli
ADVERTISEMENT
ADVERTISEMENT