செய்திகள்

துளிகள்

17th Mar 2021 02:20 AM

ADVERTISEMENT

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஐக்கிய அரபு அமீரக வீரா்கள் முகமது நவீது, ஷாய்மன் அன்வா் ஆகியோருக்கு ஐசிசி 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற மல்யுத்தத் தோ்வுப் போட்டியில் வெற்றி பெற்ற சந்தீப் சிங் மான் (74 கிலோ), கஜகஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு போட்டிக்குத் தோ்வாகினாா்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தில் பந்துவீச்சில் தாமதித்தாக இலங்கை அணியினருக்கு அவா்களின் ஆட்ட ஊதியத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தில் புதன்கிழமை தொடங்கும் ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நெவால், சமீா் வா்மா, கிடாம்பி ஸ்ரீகாந்த், பி.காஷ்யப் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT