செய்திகள்

பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணம்: புதிய புகைப்படங்கள்

16th Mar 2021 01:40 PM

ADVERTISEMENT

 

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனைப் பிரபல கிரிக்கெட் வீரர் பும்ரா திருமணம் செய்துள்ளார்.

இந்திய அணிக்காக 19 டெஸ்டுகள், 67 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் பும்ரா. சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனை நேற்று கோவாவில் திருமணம் செய்துள்ளார் பும்ரா. 

ADVERTISEMENT

நாங்கள் இருவரும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளோம். இன்று, எங்களுக்கு மகிழ்ச்சியான நாள். எங்களுடைய திருமணம் மற்றும் மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளோம் என்று ட்விட்டரில் கூறியுள்ளார் பும்ரா. 

தமிழ்ப் பெண்ணான சஞ்சனா கணேசன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் பும்ரா - சஞ்சனா கணேசன் திருமணத்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

படங்கள்: instagram.com/storiesbyjosephradhik/

ADVERTISEMENT
ADVERTISEMENT