செய்திகள்

பட்லர், பேர்ஸ்டோவ் அதிரடி: 3-வது டி20யில் இங்கிலாந்து வெற்றி

16th Mar 2021 10:35 PM

ADVERTISEMENT


இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

157 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். யுஸ்வேந்திர சஹால் வீசிய 3-வது ஓவரில் ராய் 9 ரன்களுக்கு முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். எனினும் பட்லர் அந்த ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்து மிரட்டலைத் தொடங்கினார்.

ADVERTISEMENT

ஷர்துல் தாக்குர் ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர், சஹால் வீசிய 6-வது ஓவரில் 2 பவுண்டரி என பட்லர் அதிரடி காட்ட பவர் பிளே முடிவில் இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்தது.

டேவிட் மலான் ஒத்துழைப்பு தர ரன் குவிக்கும் பொறுப்பை பட்லர் எடுத்துக்கொண்டார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 26-வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

அடுத்த ஓவரிலேயே மலான் 18 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் பாட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

18.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பட்லர் 52 பந்துகளில் 83 ரன்களும், பேர்ஸ்டோவ் 28 பந்துகளில் 40 ரன்களும் எடுத்தனர்.

Tags : England win
ADVERTISEMENT
ADVERTISEMENT