செய்திகள்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி!

15th Mar 2021 10:46 AM

ADVERTISEMENT

 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

நார்த்சவுண்டில் நடைபெற்ற 3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. 151 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பிறகு ஜோடி சேர்ந்த ஆஷன் பண்டாராவும் டி சில்வாவும் அபாரமான கூட்டணி அமைத்தார்கள். டி சில்வா 80 ரன்களும் பண்டாரா 55 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மே.இ. தீவுகள் அணியின் அகில் ஹோசெயின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பிறகு விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 48.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து 3-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் 64 ரன்களும் டேரன் பிராவோ 102 ரன்களும் பொலார்ட் 53* ரன்களும் எடுத்தார்கள். 

ADVERTISEMENT

இரு அணிகளுக்கு இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர், மார்ச் 21 முதல் தொடங்குகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT