செய்திகள்

செளதாம்ப்டனில் இந்தியா - நியூசிலாந்து மோதல்: ஐசிசி அறிவிப்பு

10th Mar 2021 03:38 PM

ADVERTISEMENT

 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் இங்கிலாந்தின் செளதாம்ப்டனில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மோதவுள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டம் லார்ட்ஸில் நடைபெறுவதற்குப் பதிலாக செளதாம்ப்டனில் நடைபெறும் என ஐசிசி இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

செளதாம்ப்டன் மைதானத்துக்குள்ளேயே தங்கும் விடுதி உள்ளது. அதனால் கரோனா பாதுகாப்பு வளையத்தைக் கையாள்வது சுலபமாக இருக்கும். இந்தக் காரணங்களால் தான் கடந்த வருடம் கிரிக்கெட் ஆட்டங்கள் இங்கிலாந்தில் மீண்டும் தொடங்கியபோது பல டெஸ்ட் ஆட்டங்கள் செளதாம்ப்டன் மற்றும் மான்செஸ்டரில் நடைபெற்றது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டமும் இங்கு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT