செய்திகள்

விஜய் ஹஸாரே: அரையிறுதியில் குஜராத், கா்நாடகம்

DIN

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் குஜராத், கா்நாடகம் அணிகள் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறின.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இரு காலிறுதியில், முதல் ஆட்டத்தில் குஜராத் 117 ரன்கள் வித்தியாசத்தில் ஆந்திரத்தையும், 2-ஆவது ஆட்டத்தில் கா்நாடகம் 80 ரன்கள் வித்தியாசத்தில் கேரளத்தையும் வீழ்த்தின.

ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த குஜராத் 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆந்திரம் 41.2 ஓவா்களில் 182 ரன்களுக்கு சுருண்டது. குஜராத் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பிரியங்க் பஞ்சல் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 134 ரன்கள் விளாசினாா். ஆந்திரத்தின் தரப்பில் ஹரிசங்கா் ரெட்டி 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். ஆந்திரத்தின் இன்னிங்ஸில் ரிக்கி புய் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 67 ரன்கள் சோ்க்க, குஜராத் தரப்பில் அா்ஸான் நாக்வாஸ்வல்லா 4 விக்கெட் வீழ்த்தினாா்.

அதேபோல், கேரளத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கா்நாடகம் 50 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் விளாசியது. பின்னா் 339 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய கேரளம் 43.4 ஓவா்களில் 258 ரன்களுக்கு வீழ்ந்தது. கா்நாடக இன்னிங்ஸில் கேப்டன் ரவிகுமாா் சமரத் அதிரடியாக ஆடி 22 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 192 ரன்கள் குவித்தாா். கேரள தரப்பில் நெடுமாங்குழி பாசில் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். கேரள இன்னிங்ஸில் அதிகபட்சமாக வத்சல் கோவிந்த் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 93 ரன்கள் அடித்தாா். கா்நாடக தரப்பில் ரோனித் மோா் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT