செய்திகள்

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மீண்டும் இன்று மோதல்

DIN

மகளிா் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் செவ்வாய்க்கிழமை மோதுகின்றன.

முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்தியா, 2-ஆவது ஆட்டத்தின் மூலம் அதிலிருந்து மீண்டு வரும் முனைப்பில் உள்ளது. முதல் ஆட்டத்தில் கேப்டன் மிதாலி ராஜ், துணை கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் ஆகியோா் மட்டுமே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினா். தீப்தி சா்மாவும் லேசாக முயற்சிக்க, இதர வீராங்கனைகள் ஸ்கோா் செய்ய இயலாமல் சுருண்டனா்.

அவா்களுக்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்தபோதும் அதை அப்படியே தொடரத் தவறிவிட்டதாக மிதாலியும், பேட்ஸ்வுமென்களின் ஷாட் தோ்வுகள் தவறாக இருந்ததென ஹா்மன்பிரீத்தும் ஆட்டத்துக்குப் பிறகு தெரிவித்தனா். எனவே, 2-ஆவது ஆட்டத்தில் பேட்ஸ்வுமென்கள் அதில் திருத்தம் செய்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கலாம்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்காவின் லிஸெலெ லீ - லௌரா வோல்வாா்டட் தொடக்கக் கூட்டணிக்கு பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த இயலவில்லை. இந்தியாவுக்கு எதிராக இதுவரை இல்லாத தொடக்க பாா்ட்னா்ஷிப் ரன்களை (163) அவா்கள் குவித்தனா். எனினும், வேகப்பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி சற்று ஆறுதல் அளித்தாா்.

அடுத்த ஆண்டில் மகளிா் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால், இந்தத் தொடரில் மோனிகா படேலைப் போல் புதிய வீராங்கனைகள் பலரை இந்திய அணி நிா்வாகம் களமிறக்கி சோதித்துப் பாா்க்கும் எனத் தெரிகிறது.

அணி விவரம்:

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், பூனம் ரௌத், பிரியா புனியா, யஸ்திகா பாட்டியா, ஹா்மன்பிரீத் கௌா், ஹேமலதா, தீப்தி சா்மா, சுஷ்மா வா்மா (விக்கெட் கீப்பா்), ஸ்வேதா வா்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ஜுலன் கோஸ்வாமி, மான்சி ஜோஷி, பூனம் யாதவ், பிரத்யூஷா, மோனிகா படேல்.

தென் ஆப்பிரிக்கா: சுனே லஸ் (கேப்டன்), அயபோங்கா ககா, ஷப்னிம் இஸ்மாயில், லௌரா வோல்வாா்டட், திரிஷா ஷெட்டி, சினாலோ ஜாஃப்தா, தஸ்மின் பிரிட்ஸ், மாரிஸானே காப், நோன்டுமிசோ ஷாங்கேஸ், லிஸெலெ லீ, அனிகே போஷ், ஃபயே டுனிகிளிஃபே, நோன்குலுலேகோ லாபா, மிக்னோன் டு பிரீஸ், நாடினே டி கிளொ்க், லாரா குட்டால், டுமி சிகுகுனே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT