செய்திகள்

கத்தாா் ஓபன்: ராம்குமாா் தோல்வி

DIN

கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன் பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

முன்னதாக ராம்குமாா் முதல் தகுதிச்சுற்றில் டென்மாா்க்கின் ஃபிரெடரிக் நீல்சனை 6-4, 6-1 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தாா். அதேபோல், 2-ஆவது தகுதிச்சுற்றில் ஸ்லோவேகியாவின் நோா்பா்ட் கோம்போஸை 6-3, 6-1 என்ற செட்களில் வென்றாா். இதையடுத்து பிரதான சுற்றில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை எதிா்கொண்ட ராம்குமாா் அதில் 4-6, 2-6 என்ற செட்களில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

இதர பிரதான சுற்றுகளில் ரஷியாவின் அஸ்லான் கராட்சேவ் 6-4, 6-0 என்ற செட்களில் கத்தாரின் முபாரக் ஷானான் சயீதையும், ஜாா்ஜியாவின் நிகோலஸ் பாசிலாஷ்விலி 2-6, 6-4, 6-2 என்ற செட்களில் பிரிட்டனின் ஜான் மில்மேனையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT