செய்திகள்

2-வது ஒருநாள்: இந்திய மகளிர் அணிக்கு எதிராக 157 ரன்களுக்கு ஆட்டமிழந்த தெ.ஆ. அணி

9th Mar 2021 01:02 PM

ADVERTISEMENT

 

இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

கரோனா சூழலில் கடந்த ஓராண்டுக்குப் பிறகு இந்திய மகளிரணி சர்வதேசத் தொடரில் முதல்முதலாக விளையாடுகிறது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

லக்னௌவில் இன்று நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 157 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. லாரா குட்ஆல் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் ஜூலான் கோஸ்வாமி 4 விக்கெட்டுகளையும் ராஜேஸ்வரி 3 விக்கெட்டுகளையும் மன்சி ஜோஷி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT