செய்திகள்

அதிக வாரங்களாக நெ.1 வீரர்: ஃபெடரரின் சாதனையை முறியடித்தார் ஜோகோவிச்!

DIN

ஏடிபி தரவரிசையில் அதிக வாரங்கள் முதல்நிலை வீரராக இருந்து ஃபெடரரின் சாதனையை முறியடித்துள்ளார் பிரபல வீரர் ஜோகோவிச்.

சமீபத்தில் தனது 9-வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், அத்துடன் 18-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஏடிபி தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார் 33 வயது ஜோகோவிச். இதன்மூலம் முதல்நிலை வீரராக 311 வாரங்கள் இருந்த முதல் வீரர் என்கிற புதிய சாதனையைப் படைத்துள்ளார். கடந்த வருட பிப்ரவரி மாதம் நடாலைப் பின்னுக்குத் தள்ளி தரவரிசையில் நெ.1 இடத்தைப் பிடித்த ஜோகோவிச் கடந்த 36 வாரங்களாகத் தொடர்ச்சியாக நெ.1 வீரராக உள்ளார். 

ஏடிபி தரவரிசை வரலாற்றில் அதிக வாரங்களில் முதல்நிலை வீரராக இருந்தவர் என்கிற பெருமை ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா் வசம் இருந்தது. அவர் 310 வாரங்கள் முதல்நிலை வீரராக இருந்தார். தற்போது ஃபெடரரின் சாதனையை முறியடித்துள்ளார் ஜோகோவிச். புதிய ஏடிபி தரவரிசையில் ஜோகோவிச் முதல் இடத்திலும் நடால் 2-ம் இடத்திலும் ஃபெடரர் 6-ம் இடத்திலும் உள்ளார்கள்.

கடந்த வருட இறுதியில் மற்றொரு சாதனையை ஜோகோவிச் நிகழ்த்தினார். ஒரு வருடத்தை நெ.1 வீரராக ஆறு வருடங்கள் அவர் முடித்துள்ளார். 2011, 2012, 2014, 2015, 2018, 2020 ஆகிய வருடங்களின் இறுதியில் நெ.1 வீரராக அவர் திகழ்ந்துள்ளார். இதனால் ஆறு வருடங்களை நெ.1 வீரராக முடித்த சாம்பிராஸின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்தார். 1993 முதல் 1998 என தொடர்ச்சியாக ஆறு வருடங்களை நெ.1 வீரராக முடித்துள்ளார் சாம்பிராஸ்.

நெ.1 வீரராக அதிக வாரங்கள்

ஜோகோவிச் 311
ஃபெடரர் 310
சாம்பிராஸ் 286
இவான் லெண்டில் 270

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

SCROLL FOR NEXT