செய்திகள்

3-ஆவது டி20: இலங்கையை வென்றது மே.இ. தீவுகள்; தொடரையும் கைப்பற்றியது

DIN

இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 2-1 என்ற கணக்கில் வென்றது. மேற்கிந்தியத் தீவுகளின் ஃபாபியான் ஆலன் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

மேற்கிந்தியத் தீவுகளின் கூலிட்ஜ் நகரில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரா் டாசன் ஷனகா 9 ரன்னுக்கு வெளியேற, உடன் வந்த பாதும் நிஷங்கா 5 ரன்களில் நடையைக் கட்டினாா். நிரோஷன் டிக்வெல்லா 4, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்கள் அடித்தனா். அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 3 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள், ஆஷென் பந்தாரா 44 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஃபாபியான் ஆலன், கெவின் சின்கிளோ், ஜேசன் ஹோல்டா், ஒபெட் மெக்காய் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் 132 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய மேற்கிந்தியத் தீவுகளில் தொடக்க வீரா் லெண்டல் சைமன்ஸ் அதிகபட்சமாக 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்கள் விளாசினாா். உடன் வந்த எவின் லீவிஸ் 21 ரன்கள் சோ்க்க, கிறிஸ் கெயில் 13 ரன்களில் வெளியேற்றப்பட்டாா். கேப்டன் கிரண் பொல்லாா்ட், டுவெய்ன் பிராவோ டக் அவுட்டாகினா்.

பின்னா் ஆடியோரில் நிகோலஸ் பூரன் 23, ரோவ்மென் பாவெல் 7 ரன்கள் சோ்த்து வெளியேற, ஜேசன் ஹோல்டா் 14, ஃபாபியான் ஆலன் 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு வழிநடத்தினா். இலங்கை தரப்பில் லக்ஷன் சண்டகன் 3, துஷ்மந்தா சமீரா, டி சில்வா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT