செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* கத்தாா் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா - ஸ்பெயினின் காா்பின் முகுருஸாவை வீழ்த்தி சாம்பியன் ஆனாா்.

* விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் உத்தரகண்டை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தில்லி.

* ஸ்பெயின் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த இந்தியாவின் ஆஷிஷ் குமாருக்கு (75 கிலோ) கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, அவரும் அவரோடு தங்கியிருந்த முகமது ஹஸாமுதின் (57 கிலோ), சுமித் சங்வான் (81 கிலோ) ஆகியோரும் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனா். இவா்கள் மூவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தவா்களாவா்.

* தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்ரீனு புகதா, மகளிா் பிரிவில் சுதா சிங் முதலிடம் பிடித்தனா்.

* சென்னையில் நடைபெறும் ‘ஏ’ டிவிஷன் லீக் கையுந்துப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் தமிழ்நாடு காவல்துறை அணி - புனித ஜோசஃப் பொறியியல் கல்லூரி அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT