செய்திகள்

தோனிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது எப்படி? சரத் பவார் விளக்கம்

DIN


இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைத்தது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் விளக்கமளித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பவார் பேசியது:

"2007-இல் இந்திய அணி இங்கிலாந்து சென்றது நினைவில் இருக்கிறது. அப்போது ராகுல் டிராவிட்தான் கேப்டன். நான் அப்போது இங்கிலாந்தில் இருந்தேன். டிராவிட் என்னைச் சந்திக்க வந்தார். இந்திய அணியை வழிநடத்த முடியாதது பற்றி அவர் என்னிடம் கூறினார். கேப்டன் பொறுப்பு பேட்டிங்கை பாதிப்பது குறித்து கூறினார். கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என அவர் கூறினார்.

இதையடுத்து, அணியை வழிநடத்துமாறு சச்சின் டெண்டுல்கரைக் கேட்டுக்கொண்டேன். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

இருவரும் (சச்சின் மற்றும் டிராவிட்) அணியை வழிநடத்த விரும்பாவிட்டால், என்ன செய்வது? என்று சச்சினிடம் கேட்டேன். இந்திய அணியை வழிநடத்துவதற்கு நம்மிடம் மேலும் ஒரு வீரர் இருக்கிறார், அவர் வேறுயாரும் இல்லை, எம்எஸ் தோனி என்றார் சச்சின். இதன்பிறகு, தோனியிடம் கேப்டன் பொறுப்பை வழங்கினோம்" என்றார் பவார்.

தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013-இல் சாம்பியன் டிராபி தொடர் உள்ளிட்டவற்றை வென்றது. இன்றளவில் ஐசிசி நடத்தும் அனைத்துத் தொடர்களின் கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும்தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

SCROLL FOR NEXT