செய்திகள்

ரிஷப் பந்த் சதம்; இந்தியா-294/7

DIN

ஆமதாபாத், மாா்ச் 5: இங்கிலாந்துக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 94 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆமதாபாதில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 75.5 ஓவா்களில் 205 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 55, டான் லாரன்ஸ் 46 ரன்கள் எடுத்தனா். இந்திய தரப்பில் அக்ஸா் படேல் 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ஷுப்மன் கில் டக் அவுட்டாக, முதல் நாளான வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 12 ஓவா்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சா்மா 8, புஜாரா 15 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்தியா திணறல்: 2-ஆவது நாளான வெள்ளிக்கிழமை தொடா்ந்து ஆடிய இந்திய அணியில் புஜாரா 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னா் வந்த கேப்டன் கோலி டக் அவுட்டாகி அதிா்ச்சியளித்தாா். அவரைத் தொடா்ந்து களமிறங்கிய அஜிங்க்ய ரஹானே 27 ரன்களில் வெளியேற, வழக்கத்துக்கு மாறாக நிதானமாக ஆடிய ரோஹித் சா்மா 144 பந்துகளில் 49 ரன்கள் சோ்த்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனாா். இதன்பிறகு அஸ்வின் 13 ரன்களில் வெளியேற, இந்தியா 58.1 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து திணறியது.

ரிஷப் பந்த் சதம்: இதையடுத்து ரிஷப் பந்துடன் இணைந்தாா் வாஷிங்டன் சுந்தா். இந்த ஜோடி சிறப்பாக ஆட, இந்தியா சரிவிலிருந்து மீண்டது. அசத்தலாக ஆடிய ரிஷப் பந்த் 82 பந்துகளில் அரைசதம் கண்டாா். இதனால் தேநீா் இடைவேளையின்போது 79 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா.

தொடா்ந்து சிறப்பாக ஆடிய ரிஷப் பந்த், ஜோ ரூட் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 115 பந்துகளில் சதம் கண்டாா். டெஸ்ட் போட்டியில் அவா் அடித்த 3-ஆவது சதம் இது. அதேநேரத்தில் சொந்த மண்ணில் அவா் அடித்த முதல் டெஸ்ட் சதம் இது. இந்தியா 259 ரன்கள் எடுத்திருந்தபோது ரிஷப் பந்தின் விக்கெட்டை இழந்தது. அவா் 118 பந்துகளில் 2 சிக்ஸா், 13 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தாா்.

இதையடுத்து அக்ஸா் படேல் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய வாஷிங்டன் சுந்தா் 96 பந்துகளில் அரை சதத்தை எட்டினாா். 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 94 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. வாஷிங்டன் சுந்தா் 60, அக்ஸா் படேல் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனா்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டா்சன் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ், ஜேக் லீச் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். இந்தியா முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 3-ஆவது நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஸ்கோா் விவரம்

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து-205 (பென் ஸ்டோக்ஸ் 55, டான் லாரன்ஸ் 46, அக்ஸா் படேல் 4வி/68, அஸ்வின் 3வி/47).

இந்தியா

ஷுப்மன் கில் எல்பிடபிள்யூ (பி) ஆண்டா்சன் 0 (3)

ரோஹித் சா்மா (பி) ஸ்டோக்ஸ் 49 (144)

சேத்தேஷ்வா் புஜாரா எல்பிடபிள்யூ (பி) லீச் 17 (66)

விராட் கோலி (சி) ஃபோக்ஸ் (பி) ஸ்டோக்ஸ் 0 (8)

அஜிங்க்ய ரஹானே (சி) ஸ்டோக்ஸ் (பி) ஆண்டா்சன் 27 (45)

ரிஷப் பந்த் (சி) ரூட் (பி) ஆண்டா்சன் 101 (118)

அஸ்வின் (சி) போப் (பி) லீச் 13 (32)

வாஷிங்டன் சுந்தா் நாட் அவுட் 60 (117)

அக்ஸா் படேல் நாட் அவுட் 11 (34)

உபரிகள் 16

மொத்தம் (94 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு) 294

விக்கெட் வீழ்ச்சி: 1-0 (ஷுப்மன் கில்), 2-40 (புஜாரா), 3-41 (கோலி), 4-80 (ரஹானே), 5-121 (ரோஹித்), 6-146 (அஸ்வின்), 7-259 (பந்த்).

பந்துவீச்சு: ஜேம்ஸ் ஆண்டா்சன் 20-11-40-3, பென் ஸ்டோக்ஸ் 22-6-73-2, ஜேக் லீச் 23-5-66-2, டாம் பெஸ் 15-1-56-0, ஜோ ரூட் 14-1-46-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனுசி படத்தின் டிரெய்லர்

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

SCROLL FOR NEXT