செய்திகள்

கடந்த 28 இன்னிங்ஸில் சதமடிக்காத புஜாரா!

6th Mar 2021 12:51 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கடைசியாக விளையாடிய இரு டெஸ்ட் தொடர்களிலும் புஜாரா முக்கியப் பங்களிப்பு செய்தார். அவர் இன்றி அந்த வெற்றிகள் சாத்தியமில்லை.

ஆனால் தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார் புஜாரா. இது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்துக்குக் கவலை தரும் விதமாகவே உள்ளது.

இந்தத் தொடரில் புஜாரா எடுத்த ரன்கள்:

ADVERTISEMENT

73, 15, 21, 7, 0, 17

சென்னை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு அவருடைய ஆட்டம் மோசமாகவே உள்ளது. இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் லீச் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தடுமாறி வருகிறார். ஆறு இன்னிங்ஸில் நான்கு முறை லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார்.

கடந்த 17 டெஸ்டுகளில், 28 இன்னிங்ஸில் சதமடிக்க முடியாமல் தவிக்கிறார் புஜாரா. கடைசியாக சிட்னி 2019-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 193 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு 9 அரை சதங்கள் எடுத்தாலும் அவற்றை சதமாக மாற்றவில்லை. இந்தியாவில் கடைசியாக 2017-ல் இலங்கைக்கு எதிராக 143 ரன்கள் எடுத்தார். 

புஜாரா இதுவரை 18 டெஸ்ட் சதங்கள் எடுத்துள்ளார். இந்தியாவில் 10 சதங்களும் வெளிநாட்டில் 8 சதங்களும் எடுத்துள்ளார்.

Tags : Pujara century
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT