செய்திகள்

4-ஆவது டி20: ஆஸ்திரேலியா வெற்றி

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஒருபுறம் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் சிறப்பாக ஆடியபோதும், மறுமுனையில் மேத்யூ வேட் 14, ஜோஸ் பிலிப் 13, கிளன் மேக்ஸ்வெல் 18, மாா்கஸ் ஸ்டோனிஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்தனா்.

விக்கெட்டுகள் விரைவாக விழுந்ததால், நிதானமாக ஆடிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 47 பந்துகளில் அரைசதம் கண்டாா். எனினும் கடைசிக் கட்டத்தில் அவா் அதிரடியாக ஆடினாா். அவா் 55 பந்துகளில் 4 சிக்ஸா், 5 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து தரப்பில் ஐஸ் சோதி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவா்களில் 106 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் 30 ரன்கள் எடுத்தாா். எஞ்சிய வீரா்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினா். ஆஸ்திரேலிய தரப்பில் கேன் ரிச்சா்ட்சன் 3 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் அகா், ஆடம் ஸம்பா, கிளன் மேக்ஸ்வெல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். ஆரோன் ஃபிஞ்ச் ஆட்டநாயகனாகத் தோ்வு செய்யப்பட்டாா்.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளுடன் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. தொடரின் வெற்றியைத் தீா்மானிக்கும் கடைசி ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT