செய்திகள்

4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 74/3, அக்‌ஷர் படேல் மீண்டும் அசத்தல்!

4th Mar 2021 11:46 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணி, முதல் நாள் மதிய உணவு இடைவேளையில் 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்டை இரு நாள்களில் வென்றது இந்தியா. டெஸ்ட் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் இடம்பெற்றுள்ளார்கள். இங்கிலாந்து அணியில் பிராட், ஆர்ச்சருக்குப் பதிலாக லாரன்ஸ், பெஸ் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

6-வது ஓவரை அக்‌ஷர் படேல் வீச வந்தார். 2-வது பந்திலேயே டாம் சிப்லியை போல்ட் செய்தார். சிப்லி 2 ரன்கள் மட்டும் எடுத்தார். அக்‌ஷர் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று, 9 ரன்களில் ஆட்டமிழந்தார் கிராவ்லி. இதன்பிறகு கேப்டன் ரூட்டை 5 ரன்களில் எல்பிடபிள்யூ செய்து வெளியேற்றினார் சிராஜ். ஸ்டோக்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். சிராஜ் ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். 

பேர்ஸ்டோவ், ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும் கவனமாக விளையாடி மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இந்தக் கூட்டணி 44 ரன்கள் எடுத்து இங்கிலாந்து ரசிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நாள் உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 25 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 28, ஸ்டோக்ஸ் 24 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அக்‌ஷர் படேல் 2 விக்கெட்டுகளும் சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

Tags : England Ahmedabad
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT