செய்திகள்

நியூசிலாந்தில் மூன்று நாள்களுக்குள் நாங்கள் தோற்றபோது எவ்வித சத்தமும் எழவில்லை: ஆடுகள சர்ச்சை பற்றி விராட் கோலி

3rd Mar 2021 03:51 PM

ADVERTISEMENT

 

நியூசிலாந்தில் மூன்று நாள்களுக்குள் நாங்கள் தோற்றபோது ஆடுகளத்தைப் பற்றி யாரும் பேசவில்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணிக்கு எதிராக 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. 2-வது டெஸ்டை 317 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக ஆமதாபாத்தில் நடைபெற்றது. முற்றிலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருந்த ஆமதாபாத் ஆடுகளத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தை 112 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா, ஜோ ரூட் 5 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமாகப் பந்துவீசியதால் முதல் இன்னிங்ஸில் 145 ரன்களுக்கு வீழ்ந்தது. 2-ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 81 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா, 49 ரன்கள் வெற்றி இலக்கை 2-ஆம் நாளிலேயே எட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. 11 விக்கெட்டுகள் எடுத்த அக்ஸா் படேல் ஆட்டநாயகன் ஆனாா். 

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 2-1 என இந்தியாவுக்குச் சாதகமாக உள்ளது. 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

நியூசிலாந்தில் மூன்று நாள்களுக்குள் நாங்கள் தோற்றபோது ஆடுகளத்தைப் பற்றி யாரும் பேசவில்லை. நாங்கள் திறமையில் கவனம் செலுத்துகிறோம், ஆடுகளத்தின் தன்மை குறித்து அல்ல. 

பந்து குறித்தும் ஆடுகளம் குறித்தும் ஏன் அதிகக் கவனம் செலுத்துகிறோம்? 3-வது டெஸ்டில் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சுழற்பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை. ஆடுகளம் மோசமாக இருந்தது என்பதை விடவும் திறமையை எப்படி வெளிப்படுத்தினோம் என்பது தான் முக்கியம்.

ஆடுகளம் பற்றி அதிகமாகச் சத்தம் எழுகிறது. துணைக்கண்டத்தில் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக ஆடுகளங்கள் இருப்பது சரியானதுதான் என்கிற கருத்தை இந்திய ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். ஐந்து நாள்களுக்கு ஏற்றவாறு ஆடுகளங்களை இந்தியா தயார் செய்யவேண்டும் என்று கூறுகிறீர்கள். நாங்கள் வெற்றி பெறுவதற்கு விளையாட வேண்டுமா அல்லது ஐந்து நாள்களுக்கு ஆட்டம் செல்வதற்கு ஏற்றாற்போல விளையாட வேண்டுமா என்று கூறியுள்ளார்.

Tags : virat kohli India vs England
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT