செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரவி சாஸ்திரி

DIN

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கரோனா தடுப்பூசியை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின. அதில் பிரதமா் மோடி தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கரோனா தடுப்பூசியின் முதல் தவணையை ஆமதாபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இதுகுறித்த தகவலையும் புகைப்படத்தையும் ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜன.16 முதல் மருத்துவத் துறையினா், முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை இரவு நிலவரப்படி நாட்டில் இதுவரை 1.47 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

படவேட்டு எல்லையம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

சிப்காட் ஸ்ரீ வித்யா பீடத்தில் ஸ்ரீ சீதா- ராமா் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT