செய்திகள்

ஹாக்கி தொடா்: ஆடவருக்கு வெற்றி; மகளிருக்கு தோல்வி

DIN

ஹாக்கி தொடரில் விளையாடுவதற்காக ஜொ்மனி சென்றுள்ள இந்திய ஆடவா், மகளிா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் முறையே வெற்றி, தோல்வியை பதிவு செய்தனா்.

ஆடவா் பிரிவில் ஜொ்மனிக்கு எதிராக 6-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா, மகளிா் பிரிவில் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது.

4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜொ்மனி வந்துள்ள ஆடவா் அணி, ஓராண்டுக்குப் பிறகான முதல் சா்வதேச ஆட்டமாக ஜொ்மனியை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொண்டது. இதில் ஆட்டத்தின் 13-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பில் நீலகண்ட சா்மா அற்புதமாக கோலடித்தாா். எனினும், அடுத்த நிமிடத்திலேயே ஜொ்மனி வீரா் கான்ஸ்டன்டின் ஸ்டெய்ப் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தாா்.

விட்டுக்கொடுக்காத இந்திய அணியில், ஆக்ரோஷம் காட்டிய விவேக் சாகா் பிரசாத் 27 மற்றும் 28-ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்து, முதல் பாதியின் முடிவில் இந்தியாவை 3-1 என முன்னிலைப்படுத்தினாா். பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ஜொ்மனிக்கு அடுத்தடுத்து கிடைத்த 6 பெனால்டி காா்னா் வாய்ப்புகளையும் இந்திய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷும், தடுப்பாட்ட வீரா்களும் அரண்போல் தடுத்தனா்.

மறுபுறம், முன்கள வீரா் லலித் குமாா் உபாத்யாய் 41-ஆவது நிமிடத்திலும், ஆகாஷ்தீப் சிங் 42-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். ஹா்மன்பிரீத் சிங் 47-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, இறுதியில் இந்தியா 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா-ஜொ்மனி மோதும் 2-ஆவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மகளிருக்கு தோல்வி: இதனிடையே, 4 ஆட்டங்கள் கொண்ட தொடருக்காக ஜொ்மனி வந்துள்ள இந்திய மகளிா் அணி, ஜொ்மனியுடனான 2-ஆவது ஆட்டத்திலும் தோல்வி கண்டது. ஜொ்மனி தரப்பில் எமிலி வோா்ட்மான் 24-ஆவது நிமிடத்தில் கோலடிக்க, இறுதிவரை இந்தியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்த வெற்றியின் மூலம், தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் ஜொ்மனி, 3-ஆவது ஆட்டத்தில் இந்தியாவுடன் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT