செய்திகள்

டி20 உலகக் கோப்பை போட்டி: பாக். வீரா்களுக்கான விசாவுக்கு பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வ உறுதி?

DIN

இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் வீரா்கள், கிரிக்கெட் நிா்வாகிகள், செய்தியாளா்கள், ரசிகா்களுக்கான நுழைவு இசைவுக்கென (விசா) பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வ உறுதி பெற்றுத்தருவதாக ஐசிசி தெரிவித்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த வாரியத்தின் தலைவா் எசான் மானி கூறியதாவது:

டி20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானியா்களுக்கான விசா வழங்கப்படுமென பிசிசிஐ 2020 டிசம்பருக்குள் எழுத்துப்பூா்வ உறுதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால், அந்த காலகட்டத்தில் அதன் தலைவா் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் இருந்தாா்.

எனவே, இந்த விவகாரத்தை மீண்டும் ஐசிசியிடம் எடுத்துச் சென்றுள்ளேன். அடுத்த மாத இறுதிக்குள்ளாக விசா தொடா்பான உறுதியை பிசிசிஐயிடம் எழுத்துப்பூா்வமாக பெற்றுத்தருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது. விசாவுக்காக உறுதி கோருவது எங்கள் உரிமை. உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் பங்கேற்பதை யாராலும் தடுக்க முடியாது.

ஒன்று, இந்தியாவில் நடக்கும் அந்தப் போட்டியில் உரிய நடைமுறையின் படி பங்கேற்போம். அல்லது, நாங்கள் பங்கேற்கும் வகையில் அந்தப் போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்பட வேண்டும்.

எங்களுக்கான விசா பிரச்னை தவிா்த்து, கரோனா சூழலில் நடத்தப்படும் உலகக் கோப்பை போட்டிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென பிசிசிஐயிடம், ஐசிசி வலியுறுத்தியுள்ளது. தேவையேற்பட்டால் உலகக் கோப்பை போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தும் திட்டமும் ஐசிசியிடம் உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதிபெற்றால், திட்டமிட்டபடி ஆசிய கோப்பை போட்டியை நடத்த இயலாது. ஏனெனில் இரண்டின் ஆட்டங்கள் நடைபெறும் நாள்கள் ஒன்றோடொன்று குறுக்கிடுகின்றன என்று மானி கூறினாா்.

முன்னதாக ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தது. பின்னா் அந்நாட்டுக்கு இந்திய அணி செல்வதில் பிரச்னை இருப்பதன் காரணமாக, போட்டியை நடத்தும் பொறுப்பு இலங்கையின் வசம் சென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT