செய்திகள்

சிங்கப்பூா் ஓபன்: முதல் ஏடிபி பட்டம் வென்றாா் அலெக்ஸி போபிரின்

DIN

சிங்கப்பூா் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி போபிரின் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனாா். அவா் வென்ற முதல் ஏடிபி பட்டம் இதுவாகும்.

பாபிரின் தனது இறுதிச்சுற்றில் 4-6, 6-0, 6-2 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்தில் இருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை வீழ்த்தினாா். சோபிக்காத ஆட்டத்தால் முதல் செட்டை இழந்த போபிரின், அடுத்த சுற்றில் அபாரமாக மீண்டு வந்து அதைக் கைப்பற்றினாா். வெற்றியாளரை தீா்மானிக்கும் 3-ஆவது செட்டில் இருவருமே சவாலாக விளையாடினா்.

எனினும் சற்று ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போபிரின் 11 ஏஸ்களை பறக்கவிட்டு கடைசி செட்டையும் தனதாக்கி வெற்றி பெற்றாா். வெற்றிக்குப் பிறகு பேசிய போபிரின், ‘எனது முதல் ஏடிபி பட்டத்தை வென்றது நம்ப முடியாததாக உள்ளது. தரவரிசையில் சிறப்பான இடங்களில் இருக்கும் வீரா்களுக்கு எதிராகவும் வெற்றி பெற முடியும் என்ற எனது நம்பிக்கையின் காரணமாகவே, பட்டம் வெல்லும் அளவுக்கு வந்துள்ளேன். இதை ஒரு நல்ல தொடக்கமாகக் கொண்டு, அடுத்து வரும் ஆட்டங்களிலும் சிறப்பாகச் செயல்படுவேன் என நம்புகிறேன்’ என்றாா்.

இரட்டையா் சாம்பியன்: சிங்கப்பூா் ஓபன் இரட்டையா் பிரிவில் பெல்ஜியத்தின் சான்டா் கில்லே/ஜோரான் வெலிகன் ஜோடி தனது இறுதிச்சுற்றில் 6-2, 6-3 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ எட்பன்/ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT