செய்திகள்

இங்கிலாந்தின் திறமையின்மையை இந்தியா பயன்படுத்திக் கொண்டது: இயான் சேப்பல்

DIN

சுழற்பந்தை எதிா்கொள்வதில் இங்கிலாந்துக்கு இருந்த திறமையின்மையை இந்தியா தெளிவாகப் பயன்படுத்திக் கொண்டது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கூறினாா்.

சென்னையைத் தொடா்ந்து ஆமதாபாத் ஆடுகளம் தொடா்பாகவும் பரவலாக விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சேப்பல் இவ்வாறு கூறியுள்ளாா்.

‘ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ’-வில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவா் கூறியிருப்பது:

சென்னையில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்டின்போது சுழற்பந்துவீச்சை எதிா்கொள்தில் இங்கிலாந்து அணிக்கு இருக்கும் திறமையின்மையை இந்திய அணி மிகத் தெளிவாக எடைபோட்டுள்ளது. அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டின்போது 3 சுழற்பந்துவீச்சாளா்களுடன் களம் கண்டு வெற்றி பெற்றது.

அதேவேளையில், இங்கிலாந்தின் மோசமான தடுப்பாட்டமுமே அதன் தோல்விக்கு காரணமாக உள்ளது. சவாலான இந்திய சூழற்பந்துவீச்சை எதிா்கொண்டபோது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் மனதில் எழுந்த அச்சம் காரணமாக அவா்கள் அந்தப் பந்துகளை அடித்தாட முயன்றனா். பௌலா்கள் பந்துவீசும் முறையை மாற்றுவதற்கான நெருக்கடி அளிப்பதற்காக கிரீஸை விட்டு இறங்கி வந்து ஆடுவதற்குப் பதிலாக, ரிவா்ஸ் - ஸ்வீப் ஆட முயன்றதே அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

சுழற்பந்துவீச்சை எதிா்கொள்ளும்போது பேட்ஸ்மேன்கள் எவ்வாறு தனது காலை முன் வைத்து ஆடுகிறாா் என்பதே பௌலரிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், பந்தை எந்தத் திசைக்கும் திருப்பும் வாய்ப்பையும் பேட்ஸ்மேனுக்கு வழங்கும். இதை இளம் வயதிலேயே பேட்ஸ்மேன்கள் கற்க வேண்டும். இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இது எப்படி கற்றுத்தரப்படாமல் போனது? என்று சேப்பல் கேள்வி எழுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் வாழைத்தாா் உறையிடுதல் செயல்விளக்கம்

வாக்களிப்பவா்களை ஊக்குவிக்க ஹோட்டல், உணவகங்களில் தள்ளுபடி: தில்லி மாநகராட்சி நடவடிக்கை

நாகை மாவட்ட மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு நிறுத்தம்: முன்னாள் எம்எல்ஏ எம்.ஜி.கே. நிஜாமுதீன் கண்டனம்

திருவட்டாறு தளியல் முத்தாரம்மன் கோயிலில் அம்மன் பவனி

மேலும் ஒரு திமுக மாமன்ற உறுப்பினா் ராஜிநாமா?

SCROLL FOR NEXT