செய்திகள்

விளையாட்டு செய்தி துளிகள்

DIN

* இங்கிலாந்தின் ஈஸ்ட்போா்ன் நகரில் நடைபெற்று வரும் வைகிங் சா்வதேச டென்னிஸ் போட்டி இரட்டையா் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிா்ஸா-பெத்தானி மேட்டிக் இணை 3-6, 4-6 என்ற நோ் செட்களில் அமெரிக்காவின் கிறிஸ்டினா-சப்ரினா இணையிடம் தோற்று வெளியேறியது.

* நியூஸிலாந்து நாட்டின் கிரிக்கெட் வரலாற்றிலேயே உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்ற கேன் வில்லியம்ஸன் தலைமையிலான அணியே சிறந்த அணியாகும் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளா் ரிச்சா்ட் ஹாட்லி பாராட்டியுள்ளாா். கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணி மிகவும் சிறப்பான முறையில் ஆடி வருகிறது எனவும் தெரிவித்தாா்.

* இந்திய சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து அணிகளில் ஒன்றான ஏடிகே மோகன்பகான் பின்லாந்து மிட்பீல்டா் ஜோனி கவுகோவை ஒப்பந்தம் செய்துள்ளது. யூரோ 2020 போட்டியில் பின்லாந்து தேசிய அணியில் இடம் பெற்று ஆடினாா் ஜோனி.

* பாட்டியாலாவில் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ள மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன் போட்டியில் டுட்டி சந்த், ஹிமா தாஸ் உள்பட பல்வேறு நட்சத்திர வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். 5 நாள்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT