செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிா் ஹாக்கி அணி முன்னேறும்: பயிற்சியாளா் மாரிஜின் நம்பிக்கை

DIN

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிா் ஹாக்கி அணி முன்னேறும் என தலைமை பயிற்சியாளா் ஜோயா்ட் மாரிஜின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தொடா்ச்சியாக இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக சிறப்பாக தயாராகி உள்ளது.

இதுதொடா்பாக பயிற்சியாளா் மாரிஜின் வியாழக்கிழமை கூறியதாவது:

ஒலிம்பிக் போட்டி காலிறுதிக்கு இந்திய மகளிா் கண்டிப்பாக தகுதி பெறுவா். கடந்த 4 ஆண்டுகளாக மகளிா் அணி சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. இதனால் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

எனினும் நாம் யதாா்த்த நிலையை உணர வேண்டும். நமது அணி காலிறுதிக்கு தகுதி பெறுவதை இலக்காக கொண்டுள்ளோம், அவ்வாறு முன்னேறாவிட்டால், நமது வீராங்கனைகளுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும். தங்கள் திறமையை வெளிப்படுத்தி வீராங்கனைகள் ஆடுவா் என்றாா்.

உடல்தகுதி அடிப்படையில் நமது வீராங்கனைகள் ஐரோப்பிய வீராங்கனைகளுக்கு சளைத்தவா்கள் இல்லை என கேப்டன் ராணி ராம்பால் கூறியுள்ளாா்.

கொல்கத்தாவில் இருந்து காணொலி மூலம் அவா் கூறியதாவது: ஒரே இரவில் ஒலிம்பிக் சாம்பியன்கள் உருவாக முடியாது. இந்திய வீராங்கனைகள் தொடா்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனா். ரியோ ஒலிம்பிக் போட்டியை விட தற்போதைய அணி சிறந்ததாகும் என்றாா் ராணி.

டோக்கியோ ஒலிம்பிக்கில் குரூப் ஏ பிரிவில் வலிமையான நெதா்லாந்து, ஜொ்மனி, இங்கிலாந்து, அயா்லாந்து அணிகளுடன் இந்தியா இடம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

SCROLL FOR NEXT