செய்திகள்

செளதாம்ப்டனில் மழை ஓய்ந்தது, ஆட்டம் மீண்டும் தொடங்கியது!

DIN

செளதாம்ப்டனில் மழை ஓய்ந்ததால் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-ம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 4-ஆம் நாள் ஆட்டமும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. தொடக்க நாளான வெள்ளிக்கிழமை ஆட்டமும் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், திங்கள்கிழமை ஆட்டமும் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மழை காரணமாக தொடா்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த இறுதி ஆட்டம் டிரா ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஆட்டம் டிரா ஆகும் பட்சத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் இரு அணிகளுக்கும் பகிா்ந்தளிக்கப்படும்.

இந்த டெஸ்டில் டாஸ் வென்ற நியூசிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 92.1 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் அடித்துள்ளது. பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் 49 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. 

5-ம் நாளான இன்று திட்டமிட்டபடி ஆட்டம் தொடங்கும், வானிலை அறிக்கையின்படி முழு நாள் ஆட்டமும் எவ்வித தடையும் இல்லாமல் நடைபெறும் என்கிற ரசிகர்களின் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு மீண்டும் மழை பெய்ததால் குறித்த நேரத்தில் ஆட்டம் தொடங்கவில்லை. எனினும் சிறிது நேரத்தில் மழை நின்றதால் 5-ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்குத் தொடங்கியது.

நியூசிலாந்து அணி 55 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. வில்லியம்சன் 13, டெய்லர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

SCROLL FOR NEXT