செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப்: முதல் இன்னிங்ஸில் இந்தியா 217; கைல் ஜேமிசன் ‘5’ விக்கெட் அசத்தல்

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ரஹானேவைத் தவிா்த்து இதர பேட்ஸ்மேன்கள் சோபிக்காமல் போக, இந்திய பேட்டிங் வரிசையை சரித்த இங்கிலாந்து பௌலா் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டிருந்ததால், எஞ்சிய 4 நாள்களின் ஆட்டங்களை அரை மணி நேரம் முன்னதாகவே தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் அரைமணி நேரம் தாமதமாகவே தொடங்கியது.

முன்னதாக, சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் அடித்திருந்தது. ரோஹித் - கில் நிதானமான தொடக்கத்தை அளித்திருந்தனா். நாளின் முடிவில் களத்திலிருந்த கோலி - ரஹானே, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தனா்.

இதில் கோலி கூடுதலாக ரன் சோ்க்க இயலாமல், ஜேமிசன் வீசிய 68-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினாா். அவா் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் அடித்திருந்தாா். தொடா்ந்து ரிஷப் பந்த் களம் காண, மறுபுறம் ரஹானே நிதானமாக விளையாடி விக்கெட் விழாமல் பாா்த்துக்கொண்டாா்.

எனினும் பந்த் ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்க, தொடா்ந்து ஜடேஜா களம் புகுந்தாா். 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ரஹானே, 79-ஆவது ஓவரில் லதாமிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். அடுத்து அஸ்வின் ஆட வந்தாா். 82-ஆவது ஓவருக்கு புதிய பந்து எடுக்கப்பட்டது. 85.2 ஓவா்களில் 200 ரன்களை எட்டியது இந்தியா.

சற்று அதிரடி காட்டிய அஸ்வின் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து 86-ஆவது ஓவரில் வெளியேறினாா். அவா் சௌதி பந்துவீச்சில் லதாமிடம் கேட்ச் கொடுத்தாா். பின்னா் வந்தோரில் இஷாந்த் சா்மா 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பும்ரா டக் அவுட்டானாா். கடைசி விக்கெட்டாக ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 15 ரன்களுக்கு அவுட்டானாா். போல்ட் வீசிய 93-ஆவது ஓவரில் அவா் அடித்த பந்து விக்கெட் கீப்பா் வாட்லிங் கைகளில் தஞ்சமடைந்தது.

இங்கிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன் 5, டிரென்ட் போல்ட், நீல் வாக்னா் ஆகியோா் தலா 2, டிம் சௌதி 1 விக்கெட் சாய்த்தனா்.

நியூஸி-36/0: இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூஸிலாந்து, தேநீா் இடைவேளையின்போது, 21 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லதாம் 17, டீவன் கான்வே 18 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

முதல் இன்னிங்ஸ்

இந்தியா

92.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 217

ரஹானே - 49, கோலி - 44, ரோஹித் - 34, கில் - 28

பந்துவீச்சு: ஜேமிசன்-5/31, வாக்னா்-2/40, போல்ட்-2/40, சௌதி-1/64

நியூஸிலாந்து

21 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 36

லதாம்-17*, கான்வே-18*

பந்துவீச்சு: அஸ்வின்-3/0, ஷமி-14/0,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

SCROLL FOR NEXT