செய்திகள்

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி

21st Jun 2021 02:38 PM

ADVERTISEMENT

 

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. 

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு பிசிசிஐ ரூ. 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று இந்த நிதியுதவி அளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT