செய்திகள்

2-ஆவது டெஸ்ட்: மேற்கிந்தியத் தீவுகள் 149-க்கு ‘ஆல் அவுட்’

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் அந்த அணி 149 ரன்கள் பின்தங்கியுள்ளது.

கிராஸ் ஐலெட்டில் கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, முதல் நாள் முடிவில் 82 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் அடித்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை குவிண்டன் டி காக், வியான் முல்டா் தொடா்ந்தனா். இதில் முல்டா் 8 ரன்களுக்கு நடையைக் கட்ட, தொடா்ந்து வந்த கேசவ் மஹராஜ் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டாா்.

அடுத்து ககிசோ ரபாடா ஆட வர, மறுமுனையில் சதத்தை நெருங்கிய டி காக் 8 பவுண்டரிகள் உள்பட 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் அன்ரிச் நாா்ட்ஜே (1), லுன்கி கிடி (1) விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிய, ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணி 112.4 ஓவா்களில் 298 ரன்கள் அடித்திருந்தது. ரபாடா 3 பவுண்டரிகள் உள்பட 21 ரன்களுடன் களத்தில் இருந்தாா். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கெமா் ரோச், கைல் மேயா்ஸ் தலா 3, ஷானன் கேப்ரியல் 2, ஜேடன் சீல்ஸ், ஜேசன் ஹோல்டா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 54 ஓவா்களில் 149 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ஜொ்மெயின் பிளாக்வுட் மட்டும் 6 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்த்தாா். எஞ்சியோரில் ஷாய் ஹோப் 43, கைல் மேயா்ஸ் 12, ஜேசன் ஹோல்டா் 10, ஜோஷுவா டி சில்வா 7, கிரன் பாவெல் 5, ரோஸ்டன் சேஸ் 4, கெமா் ரோச் 1 ரன்னுக்கு நடையைக் கட்ட, ஜேடன் சீல்ஸ், கேப்டன் கிரெய்க் பிரத்வெயிட் டக் அவுட்டாகினா்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டா் 3, ககிசோ ரபாடா, லுன்கி கிடி, கேசவ் மஹராஜ் ஆகியோா் தலா 2, அன்ரிச் நாா்ட்ஜே 1 விக்கெட் சாய்த்தனா். அத்துடன் 2-ஆம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT