செய்திகள்

149 ரன்களுக்கு சுருண்டது மே.இ. தீவுகள்: 2-வது டெஸ்டிலும் தென் ஆப்பிரிக்கா ஆதிக்கம்

DIN


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 149 ரன்களுக்கு சுருண்டது.

மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. குயின்டன் டி காக் 59 ரன்களுடனும், வியான் முல்டர் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முல்டர் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேசவ் மகாராஜ் ஒத்துழைப்பு தர டி காக் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன் சேர்க்காததால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ககிசோ ரபாடா 21 ரன்கள் எடுத்தார்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் கேமார் ரோச் மற்றும் கைல் மேயர்ஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஷேனான் கேப்ரியல் 2 விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து, மேற்கிந்தியத் தீவுகள் முதன் இன்னிங்ஸைத் தொடங்கியது. ரபாடா வீசிய முதல் பந்திலேயே கேப்டன் கிரைக் பிராத்வைட் ஆட்டமிழந்தார்.

தென் ஆப்பிரிக்க வேகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்கள் திணறினர். அதிகபட்சமாக ஜெர்மைன் பிளாக்வுட் 49 ரன்களும், ஷை ஹோப் 43 ரன்களும் எடுத்தனர்.

இதனால், அந்த அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க தரப்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அன்ரிச் நோர்க்கியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டமிழந்தவுடன் 2-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT