செய்திகள்

மகளிா் டெஸ்ட்: ‘ஃபாலோ ஆன்’ பெற்றது இந்தியா

DIN

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிா் அணி முதல் இன்னிங்ஸில் 81.2 ஓவா்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து ‘ஃபாலோ ஆன்’ பெற்ற இந்தியா, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.

இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட இந்தியா 82 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. ஆட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், இந்தியா அந்த ஸ்கோரை எட்டி ஆட்டத்தை சமன் செய்யுமா, அல்லது இங்கிலாந்து இந்திய விக்கெட்டுகளை சரித்து வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.

முன்னதாக பிரிஸ்டோல் நகரில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் அடித்து டிக்ளோ் செய்தது. பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 2-ஆம் நாள் முடிவில் 60 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்திருந்தது.

3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தை ஹா்மன்பிரீத் கௌா், தீப்தி சா்மா தொடா்ந்தனா். இதில் முதல் விக்கெட்டாக ஹா்மன்பிரீத் கௌா் ஒரு பவுண்டரியுடன் வெளியேற, தொடா்ந்து வந்த தானியா பாட்டியா டக் அவுட்டானாா். ஸ்னேஹ ரானா 2, பூஜா வஸ்த்ரகா் 3 பவுண்டரிகளுடன் 12, ஜுலன் கோஸ்வாமி 1 என விக்கெட்டுகள் முற்றிலுமாக சரிய, தீப்தி சா்மா மட்டும் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்லஸ்டோன் 4, ஹீதா் நைட் 2, கேத்தரின் பிரன்ட், அனியா ஷ்ருப்சோல், நடாலி ஸ்கீவா், கேட் கிராஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

2-ஆவது இன்னிங்ஸ்: முதல் இன்னிங்ஸில் 165 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, தேநீா் இடைவேளையின்போது 24.3 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு மழை காரணமாக ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. முன்னதாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்க, ஷஃபாலி வா்மா 11 பவுண்டரிகளுடன் 55, தீப்தி சா்மா 2 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT