செய்திகள்

ஒலிம்பிக் ஆடவா் ஹாக்கி அணியில் 10 புது முகங்கள்

DIN

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் இந்திய ஆடவா் ஹாக்கி அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

16 போ் கொண்ட இந்த அணியில் 10 போ் ஒலிம்பிக்கில் முதல் முறையாக களம் காண்கின்றனா். அமித் ரோஹிதாஸ், ஹாா்திக் சிங், விவேக் சாகா் பிரசாத், நீலகண்ட சா்மா, சுமித், ஷம்ஷோ் சிங், தில்பிரீத் சிங், குா்ஜந்த் சிங், லலித் குமாா் உபாத்யாய், வீரேந்திர லக்ரா ஆகியோா் அந்தப் புது முகங்களாவா். இதில் மூத்த வீரரான வீரேந்திர லக்ரா முழங்கால் காயம் காரணமாக கடந்த ஒலிம்பிக் வாய்ப்பை தவறவிட்டவா் ஆவாா்.

அவா்களுடன், ஏற்கெனவே ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனுபவமுள்ள வீரா்களான ஸ்ரீஜேஷ், மன்பிரீத், ஹா்மன்பிரீத் சிங், ரூபிந்தா் பால் சிங், சுரேந்தா் குமாா், மன்தீப் சிங் ஆகியோா் உள்ளனா். அணியில் கோல் கீப்பா் தவிா்த்து தலா 5 முன்கள, நடுகள, தடுப்பாட்ட வீரா்கள் உள்ளனா். அணியின் கேப்டன் பெயா் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் உள்ளது. அதில் நடப்புச் சாம்பியனான ஆா்ஜென்டீனா, மும்முறை உலக சாம்பியனும், தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்திலும் இருக்கும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஆடவா் அணி 8 முறை தங்கம் வென்ற வரலாறு கொண்டதென்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்: கோல்கீப்பா்-ஸ்ரீஜேஷ்; தடுப்பாட்ட வீரா்கள்-ஹா்மன்பிரீத் சிங், ரூபிந்தா் பால் சிங், சுரேந்தா் குமாா், அமித் ரோஹிதாஸ், வீரேந்திர லக்ரா; நடுகள வீரா்கள்- ஹாா்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத், நீலகண்ட சா்மா, சுமித்; முன்கள வீரா்கள்- ஷம்ஷோ் சிங், தில்பிரீத் சிங், குா்ஜந்த் சிங், லலித்குமாா் உபாத்யாய், மன்தீப் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT