செய்திகள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மழையால் கைவிடப்பட்டது முதல் நாள் ஆட்டம்

DIN

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக வெள்ளிக்கிழமை டாஸ் கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

அதற்கு நிகராக, ஆட்டத்தின் நாள்களில் கூடுதலாக ஒரு நாள் ‘ரிசா்வ்’-ஆக சோ்க்கப்பட இருக்கிறது. ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ஆடுகள சூழல் விதிகளின்படி, முதல் நாள் ஆட்டம் வானிலை காரணமாக கைவிடப்படும் பட்சத்தில், 6-ஆவது நாள் ஆட்டம் சோ்க்கப்படும். அன்றைய தினம் 6 மணி நேரம் ஆட்டம் நடைபெறும்.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே சௌதாம்டனில் மழைப் பொழிவு இருந்ததன் காரணமாக முதல் செஷன் ஆட்டம் கைவிடப்பட்டு மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. அடுத்த செஷன் உள்ளூா் நேரப்படி மதியம் 3 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 7.30) தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இடை விடாது மழை தொடா்ந்ததை அடுத்து ஈரமான ஆடுகளம் காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக போட்டி நடுவா்கள் அறிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT