செய்திகள்

36-வது பந்தில் முதல் ரன்னை எடுத்த புஜாரா

19th Jun 2021 06:13 PM

ADVERTISEMENT


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சேத்தேஷ்வர் புஜாரா தனது 36-வது பந்தில் முதல் ரன்னை எடுத்துள்ளார்.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தைத் தந்து முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர்.

ரோஹித் சர்மா 34 ரன்கள் எடுத்து கைல் ஜேமிசன் வேகத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, கில்லும் 28 ரன்னுக்கு நீல் வேக்னர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ADVERTISEMENT

இதையடுத்து, விராட் கோலி மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தனர். 2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது.

24 பந்துகளை எதிர்கொண்ட புஜாரா ரன் கணக்கைத் தொடங்கவில்லை.

உணவு இடைவேளைக்குப் பிறகு கோலியும், புஜாராவும் ஆட்டத்தைத் தொடங்கினர். புஜாரா மீண்டும் வழக்கமான பாணியில் நிதானத்தைக் காட்டி வந்தார்.

முதல் 35 பந்துகளில் புஜாரா ஒரு ரன்கூட எடுக்கவில்லை. இந்த நிலையில் வேக்னர் வீசிய 33-வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் புஜாரா. இது அவரது 36-வது பந்து.

புஜாரா ரன் கணக்கைத் தொடங்கியதும் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து ஊக்கப்படுத்தினர்.

Tags : Pujara
ADVERTISEMENT
ADVERTISEMENT