செய்திகள்

கோலி, ரஹானே நிதானம்: தேநீர் இடைவேளையில் இந்தியா 120/3

DIN


நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தின் 2-வது நாள் தேநீர் இடைவேளையில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் சௌதாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 69 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் சேத்தேஷ்வர் புஜாரா ரன் ஏதும் எடுக்காமலும், விராட் கோலி 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு தனது 36-வது பந்தில் புஜாரா பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார்.

ஆனால், மொத்தம் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்த புஜாரா 8 ரன்களுக்கு டிரென்ட் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு, கேப்டன் கோலியுடன் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே இணைந்தார். இந்த இணை நிதானம் காட்டி விளையாடியது. இந்த இணை 4-வது விக்கெட்டுக்கு 32 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில் போதிய வெளிச்சன்மை நிலவியது.

இதனால், கள நடுவர்கள் முன்கூட்டியே தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்தனர்.

2-ம் நாள் ஆட்ட தேநீர் இடைவேளையில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 35 ரன்களுடனும், ரஹானே 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், நீல் வேக்னர், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT